சங்ககால வேளிர்கள் கதைகள் ( தொடர்) - அகுதை
சங்ககால வேளிர்கள் கதைகள் (தொடர்) அகுதை தமிழ் வரலாற்றில் மறக்கப்பட்ட அல்லது குறிப்பிட படாத சங்ககால வேளிர்கள் பற்றிய சுவையான தகவல்களை வாசகர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற தணியாத ஆவலில் உருவானதுதான் இந்த தலைப்பு. சங்க கால அரசர்களில் நாம் கொடை வள்ளல்களை குறித்து நிறைய அறிந்து உள்ளோம். ஆனால் சிறிய வேளிர்கள், குறுநில மன்னர்கள் குறித்து பெரிதாக நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லாத நிலையில், அவர்களை குறித்த தகவல்களை வருங்கால சமுதாயத்திற்கு சொல்வதும், அந்த அரசர்களை நாமும் அறிந்து கொள்வதும் அவசியமாகிறது. நம் இளைய தலைமுறைக்கு இந்த அரசர்களின் பெருமையை கதையாக சொல்வதன் மூலம், அந்த அரசர்களின் அகம் மற்றும் புற சிறப்புகளை அவர்களுக்குள் விதைப்பது என்பது விதைகள் பதிப்பகத்தின் சமுதாய பொறுப்பாக மாறியுள்ளது. அந்த வகையில் இன்று நாம் தெரிந்து கொள்ள இருக்கும் சங்க கால அரசன் அகுதை. பரணர், கபிலர், கல்லாடனார், வெள்ளெருக்கிலையார் ஆகிய புலவர்களால் பாடப்பட்ட இந்த அரசனை குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க… கூடல் நகரின் அரசனாக இருந்தவன் அகுதை. இந்த கூடல் நகரை மதுரை என்றும், சில அறிஞர்கள் கூற்றுப்படி...